ADDED : ஆக 20, 2025 09:38 PM

அன்னுார்; குறுமைய விளையாட்டுப் போட்டியில் அன்னுார் மாணவர்கள் அதிக பதக்கங்களை வென்றனர்.
சர்க்கார் சாமக்குளம் குறுமைய அளவிலான தடகளப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் அன்னுார் அத்லெட்டிக் கிளப்பைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர்.
இதில் 17 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கான தட்டு எறிதல் போட்டியில் மாணவர் இனியவன் 38.80 மீ., தூரம் எறிந்து முதலிடமும், குண்டு எறிதலில், 12.10 மீ., தூரம் எறிந்து அதிலும் முதலிடம் வென்றார்.
17 வயதுக்குட்பட்ட மாணவியருக்கான தட்டெறிதலில், மாணவி நேஹரிகா 26.60 மீ., தூரம் எறிந்து, இரண்டாம் இடமும், குண்டு எறிதலில் 8.70 மீ., தூரம் எறிந்து முதலிடமும் வென்றார்.
19 வயதுக்கு உட்பட்ட மாணவியருக்கான தட்டெறிதலில் மாணவி கனிஷ்கா 22.20 மீ. தூரம் எறிந்து முதலிடம் வென்றார்.
வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு, அன்னுார் அத்லெட்டிக் கிளப் நிர்வாகிகள் பாராட்டு தெரிவித்தனர்.