/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'பந்தயம்' சிறுகதை நுால் அறிமுக விழா
/
'பந்தயம்' சிறுகதை நுால் அறிமுக விழா
ADDED : அக் 08, 2025 11:27 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை; தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் சார்பில், இலக்கிய சந்திப்பு கூட்டம், தாமஸ் கிளப் அரங்கில் நடந்தது. கவிஞர் கிரிதரன் தலைமை வகித்தார். எழுத்தாளர் அமுதா ஆர்த்தி எழுதிய, 'பந்தயம்' என்ற சிறுகதை நுால் அறிமுகம் செய்யப்பட்டது.
நுால் குறித்து, கவிஞர் கீர்த்தி பேசுகையில், ''இவ்வளவு காலங்கள் கடந்தும், பெண்களின் முன்னேற்றப் பாதையில் சூழ்ந்திருக்கும் இருள், இன்னும் விலகவில்லை என்பதை, தன் கதைகளில் யதார்த்தமான மொழி நடையில் படைத்திருக்கிறார் அமுதா,'' என்றார்.
பேராசிரியர் அன்பரசி, தங்கமுருகேசன், பிரகாஷ், அந்தோணி ராஜா உள்ளிட்டோர் பேசினர்.