/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் பற்றாக்குறை'
/
'அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் பற்றாக்குறை'
ADDED : ஜூலை 27, 2025 10:52 PM

அன்னுார்; 'அன்னூர் அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் பற்றாக்குறை உள்ளது,' என, ஜனநாயக வாலிபர் சங்க மாநாட்டில் புகார் தெரிவிக்கப்பட்டது.
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின், 11வது அன்னூர் ஒன்றிய மாநாடு நேற்று நடந்தது. கைகாட்டியில் பேரணியை முன்னாள் மாவட்ட தலைவர் மணிகண்டன் துவக்கி வைத்தார். கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. வாலிபர் சங்க மாநில தலைவர் கார்த்தி, 'வாலிபர் சங்கம் நடத்திய போராட்டங்கள் குறித்து பேசினார். சங்க மாவ ட்ட செயலாளர் அர்ஜுன் பேசுகையில்,''அன்னூர் அரசு மருத்துவமனைக்கு தினமும் 500 பேர் சிகிச்சை பெற வருகின்றனர். 60 பேர் தங்கி சிகிச்சை பெறுகின்றார். ஆனால் டாக்டர்கள், செவிலியர்கள், மருத்துவ உதவியாளர்கள் பற்றாக்குறை உள்ளதால் பொதுமக்கள் தவிக்கின்றனர். அரசு விரைவில் போதுமான ஊழியர்களை நியமிக்க வலியுறுத்தி போராட்டம் நடத்த உள்ளோம், என்றார்.