/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
துணை சுகாதார நிலையத்தில் செவிலியர்கள் பற்றாக்குறை
/
துணை சுகாதார நிலையத்தில் செவிலியர்கள் பற்றாக்குறை
ADDED : பிப் 03, 2025 03:56 AM
கிணத்துக்கடவு :   கிணத்துக்கடவு, சொக்கனுார் அரசு துணை சுகாதார நிலையத்தில் செவிலியர்கள் பற்றாக்குறையால், மக்கள் அவதிப்படுகின்றனர்.
கிணத்துக்கடவு, சொக்கனுார் ஊராட்சியில், ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இப்பகுதி மக்கள், சளி, காய்ச்சல் போன்ற உடல்நலக் கோளாறுக்கு, இங்குள்ள துணை சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெறுகின்றனர்.
தற்போது, துணை சுகாதார நிலையத்தில் இரவு நேரத்தில் செவிலியர்கள் இல்லாததால், மக்கள் சிகிச்சை பெற முடியாமல் அவதிப்படுகின்றனர். எனவே, இங்கு போதுமான அளவில் செவிலியர்கள் நியமனம் செய்ய வேண்டும், என, அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.
மருத்துவ அலுவலர்கள் கூறுகையில், 'பதவி உயர்வு, உயர்கல்வி, பணி இட மாற்றம் போன்ற காரணங்களால், செவிலியர்கள் வேறு இடத்திற்கு சென்று விட்டனர். இதை தவிர்க்க, காலை நேரத்தில் பணி புரியும் செவிலியர்களே, இரவு நேரத்தில் கர்ப்பிணிகள் மற்றும் பெரிய பாதிப்பு ஏற்பட்டு வருவோரை, கவனித்து டாக்டரிடம் தெரிவிக்கின்றனர். விரைவில், கூடுதல் செவிலியர்கள் பணியமர்த்தப்படுவர்,' என்றனர்.

