/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தொழில்நுட்ப பணியாளர்கள் பற்றாக்குறை
/
தொழில்நுட்ப பணியாளர்கள் பற்றாக்குறை
ADDED : ஆக 14, 2025 10:12 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை; தமிழ்நாடு பொறியியல் கல்லுாரி தொழில்நுட்ப பணியாளர்கள் சங்க பொதுக்குழு கூட்டம் நேற்று இடையர்பாளையம் பகுதியில் உள்ள சங்க மாநில மையத்தில் நடந்தது. சங்க தலைவர் கார்த்திகேயன் தலைமைவகித்தார்.
இக்கூட்டத்தில், பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்துதல், தொழில்நுட்ப பணியாளர்களுக்கு பதவி உயர்வு அளித்தல், முதுநிலை பட்டியல் வெளியிடுதல், கலந்தாய்வு நடத்துதல்,ஏ.ஐ.சி.டி.இ., விதிமுறைகளின் படி காலியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட 11 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில், மாநில பொதுச்செயலாளர் விசு, துணைத்தலைவர் ரஞ்சித்குமார், பொருளாளர் பீட்டர் ரமேஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.