ADDED : ஆக 14, 2025 10:12 PM
மொபைல் போன் பறித்த 2 பேர் கைது
நாகபட்டினத்தை சேர்ந்த வெங்கடாசலம்,51, என்பவர், துடியலுார் அருகே வெள்ளக்கிணறில் அறை எடுத்து தங்கி, அதே பகுதியிலுள்ள ஓட்டலில் வேலை செய்து வந்தார்.
நேற்று அதிகாலை பணிமுடிந்து அறைக்கு சென்ற போது, கோவை, டெக்சிட்டி அபார்ட்மென்டில் வசித்து வரும் நித்தீஷ்,19, மற்றும் 17 வயதுள்ள சிறுவன் சேர்ந்து வழிமறித்து மொபைல் போனை பறித்து சென்றனர். புகாரின் பேரில், துடியலுார் போலீசார் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இரும்பு கடையில் பணம் திருட்டு
கோவை, செல்வபுரம், பழனியப்பா நகரை சேர்ந்தவர் மூர்த்தி,54; இவரது வீட்டு முன் பழைய இரும்பு கடை நடத்தி வருகிறார். கடையை பூட்டி விட்டுதுாங்க சென்றார். நள்ளிரவில் மர்ம ஆசாமிகள் கடை பூட்டை உடைத்து, அங்கிருந்த 33,500 ரூபாயை திருடி சென்றனர். புகாரின் பேரில் செல்வபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
அனுமதியின்றி பிளக்ஸ் வைத்தவர் கைது
கோவை, காந்திபுரம், டவுன் பஸ் ஸ்டாண்ட் நுழைவு வாயில் முன் மாநகராட்சி அனுமதியின்றி, தனியார் நிறுவனத்தின் பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டு இருந்தது. புகாரின் பேரில், காட்டூர் போலீசார் விசாரித்து, பிளக்ஸ் பேனர் வைத்தது தொடர்பாக, ரத்னபுரியை சேர்ந்த பேச்சிமுத்து,55, என்பவரை கைது செய்தனர். பின் ஜாமினில் விடுவித்தனர்.