ADDED : ஆக 14, 2025 10:07 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தொண்டாமுத்தூர்; தொண்டாமுத்தூர் வட்டாரத்தில், சாரல் மழை பெய்ததால், குளிர்ச்சியான காலநிலை நிலவியது.
கோவையின் மேற்கு புறநகர் பகுதியாக தொண்டாமுத்தூர் வட்டார பகுதி உள்ளது. கடந்த இரு நாட்களாக, வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
இதனால், வெயிலின் தாக்கமின்றி, இதமான சூழல் நிலவி வந்தது. தொண்டாமுத்தூர் வட்டார பகுதிகளான, சாடிவயல், ஆலாந்துறை,நரசீபுரம், பூண்டி, தொண்டாமுத்தூர், ஓணாப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில், நேற்று காலையில், சுமார், 2 மணி நேரமும், மாலையில், 2 மணி நேரமும், சாரல் மழை பெய்தது. இதனால், தொண்டா முத்தூர் வட்டார பகுதி முழுவதும், பகல் நேரத்திலேயே, மிகவும் குளிர்ச்சியான காலநிலை நிலவியது.

