/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சின்ன வெங்காயம் அறுவடை பணிக்கு ஆட்கள் தட்டுப்பாடு
/
சின்ன வெங்காயம் அறுவடை பணிக்கு ஆட்கள் தட்டுப்பாடு
ADDED : ஆக 20, 2025 12:48 AM
தொண்டாமுத்தூர்; தொண்டாமுத்தூர் வட்டாரத்தில், சின்ன வெங்காயம் அறுவடை பணிக்கு, ஆட்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக, விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
தொண்டாமுத்தூர் வட்டாரத்தில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது.
இங்கு, ஆண்டுதோறும், சுமார், 20,000 ஏக்கர் பரப்பளவில், சின்ன வெங்காயம் சாகுபடி செய்து வருகின்றனர். இந்தாண்டு, வைகாசி பட்டத்தில், 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில், சின்ன வெங்காயம் சாகுபடி செய்தனர்.
சாகுபடி செய்த சின்ன வெங்காயத்தை, அறுவடை செய்யும் பணி நடந்து வருகிறது. இன்னும், 3 ஆயிரம் ஏக்கர் பரப்பளவிற்கு, அறுவடை செய்ய வேண்டியுள்ளது.
வழக்கமாக அறுவடை பணிக்கு, இப்பகுதியில் ஆட்கள் தட்டுப்பாடு உள்ளதால், நாமக்கல் பகுதியில் இருந்து, ஆட்கள் வந்து தங்கி, அறுவடை பணியில் ஈடுபடுவார்கள்.
இந்தாண்டு நாமக்கல் பகுதியில், விவசாய பணிகள் நடந்து வருவதால், தொண்டாமுத்தூர் வட்டாரத்திற்கு, ஆட்கள் வரவில்லை.
தற்போது, சின்ன வெங்காயம் தோண்டும் பணிக்கு, ஒரு ஆளுக்கு, 500 ரூபாய் கூலி வழங்கப்படுகிறது.
இதனால், ஆட்கள் தட்டுப்பாட்டால், அறுவடை பணிகளில் தோய்வு ஏற்பட்டுவதோடு, உற்பத்தி செலவும் அதிகரிக்கிறது.
இந்த பட்டத்தில், காலநிலை மாறி மழை பெய்ததால், விளைச்சலும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், உற்பத்தி செலவும் கூடியுள்ளதாக, விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.