/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மியூச்சுவல் டைவர்ஸ் காத்திருக்க வேண்டுமா?
/
மியூச்சுவல் டைவர்ஸ் காத்திருக்க வேண்டுமா?
ADDED : ஆக 31, 2025 06:54 AM
கணவன் -மனைவி இருவரும் இணைந்து, 'மியூச்சுவல் டைவர்ஸ்' தாக்கல் செய்தால், ஆறு மாதம் பிரிந்து இருக்க வேண்டும் என்பது கட்டாயமா?
ஆமாம். ஹிந்து திருமண சட்டம் பிரிவு 138(2)-ன் படி, இருவர் சம்மதத்துடன், விவாகரத்து வழக்கு தாக்கல் செய்தபிறகு, ஆறு மாதம் கழித்து தான் கோர்ட்டில் வாய்தா கொடுக்கப்படும். அந்த வாய்தா தேதி அன்று கணவன் -மனைவி இருவரும். கோர்ட்டில் ஆஜராகி சாட்சியம் அளித்து மியூச்சுவல் டைவர்ஸ் பெற்றுக்கொள்ளலாம். ஆனால் அரசியல் சாசனம் சட்டப்பிரிவு, 142-ன் கீழ், சில வழக்குகளில் ஆறுமாதம் காத்திருக்க வேண்டாம் என்று, உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இது வழக்கின் தன்மையை பொறுத்து மாறுபடும்.
வீட்டை பொதுவழிபாட்டு ஸ்தலமாக பயன்படுத்தலாமா?
ஒரு வீட்டை பொது வழிபாட்டு ஸ்தலமாக பயன்படுத்த வேண்டுமென்றால், மாவட்ட கலெக்டர் அனுமதி பெற வேண்டும். அரசாங்க முன்அனுமதி இன்றி, எந்த ஒரு வீட்டையும் எந்த ஒரு மத வழிபாட்டிற்கும் பயன்படுத்த கூடாது.
- வக்கீல் ஆர்.சண்முகம்,
ரேஸ்கோர்ஸ்.

