/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சைக்கிள் ஓட்டி காட்டுங்க; கிராம உதவியாளர் தேர்வில் சுவாரஸ்யம்
/
சைக்கிள் ஓட்டி காட்டுங்க; கிராம உதவியாளர் தேர்வில் சுவாரஸ்யம்
சைக்கிள் ஓட்டி காட்டுங்க; கிராம உதவியாளர் தேர்வில் சுவாரஸ்யம்
சைக்கிள் ஓட்டி காட்டுங்க; கிராம உதவியாளர் தேர்வில் சுவாரஸ்யம்
ADDED : செப் 18, 2025 10:20 PM

அன்னுார்; கிராம உதவியாளர் தேர்வுக்கு வந்தவர்களை சைக்கிள் ஓட்டி காட்டும்படி அதி காரிகள் அறிவுறுத்தினர்.
அன்னுார் தாலுகாவில், ஏழு வருவாய் கிராமங்களுக்கு கிராம உதவியாளர் பணியிடத்திற்கு கடந்த மாதம் 340 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. 46 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. விண்ணப்பித்த 294 பேரில் முதல் கட்டமாக நேற்று 150 பேருக்கு எழுத்து தேர்வுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதில் 21 பேர் வரவில்லை. 129 பேர் மட்டும் வந்திருந்தனர்.
ஆண்களை விட பெண்கள் அதிக அளவில் விண்ணப்பித்திருந்தனர். தாசில்தார் யமுனா மற்றும் துணை தாசில்தார்கள் தேர்வை நடத்தினர். விண்ணப்பதாரர்களிடம் ஒரு உத்தரவு வாசிக்கப்பட்டு அதை எழுதித் தரும்படி கூறப்பட்டது. பின்னர் அரசு உத்தரவு ஒன்றை வாசிக்கும்படி கூறினர். அவர்களது ஒரிஜினல் சான்றிதழும் நகலும் சரிபார்க்கப்பட்டது. இருசக்கர வாகன ஓட்டுநர் உரிமம் இல்லாதவர்கள் சைக்கிள் ஓட்டி காட்ட வேண்டும் என்று கூறப்பட்டது. இதையடுத்து டிரைவிங் லைசென்ஸ் இல்லாத ஆண்கள், பெண்கள் தாலுகா அலுவலக வளாகத்தில் 100 அடி துாரத்திற்கு சைக்கிளை ஓட்டிச் சென்று மீண்டும் திரும்பி ஓட்டி வந்தனர். இன்று 194 பேருக்கு எழுத்து தேர்வு நடக்கிறது. எழுத்து தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு நேர்முகத் தேர்வு அக். 7ம் தேதி நடைபெற உள்ளது.