ADDED : ஜூன் 14, 2026 03:24 AM

அ நிறம் | அளவு
சூலுார்: சூலுாரில் சேதமடைந்த ஷட்டர்களை சீரமைக்கும் பணி நடப்பதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சூலுார் ரயில்வே பீடர் ரோட்டில், சிவன் கோவில் அருகே, பெரிய குளத்தில் இருந்து சின்ன குளத்துக்கு தண்ணீர் திறக்கும் ஷட்டர்கள் உள்ளன. கடந்த ஏப்., மாதம் வாகனம் மோதியதில், தடுப்பு சுவர் மற்றும் ஷட்டர்கள் சேதமடைந்தன. இவை சீரமைக்கப்படாததால், விவசாயிகள் வேதனை அடைந்தனர். இதுகுறித்த செய்தி மே 7ம் தேதி நமது நாளிதழில் படத்துடன் வெளியானது.
இதையடுத்து, விவசாயிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர், நீர் வள ஆதாரத்துறை அதிகாரிகள், சூலுார் எம்.எல்.ஏ., விடம் மனு அளித்தனர்.
இதைத் தொடர்ந்து, நீர் வள ஆதாரத்துறையினர் ஷட்டர்களை சீரமைத்து, தடுப்பு சுவர் கட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
