/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
உருக்கு பொருட்களுக்கு இறக்குமதி வரி ரத்து செய்ய 'சியா' சங்கம் வேண்டுகோள்

ADDED : ஆக 31, 2025 11:45 PM
கோவை; சின்னவேடம்பட்டி தொழில்துறை சங்கம் (சியா) ஆண்டு பொதுக்குழு கூட்டம், தலைவர் தேவகுமார் தலைமையில் நடந்தது.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
தமிழக மின்வாரியம், தாழ்வழுத்த மின் இணைப்புக்கு ஸ்மார்ட் மீட்டர் பொருத்தி வருகிறது. ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்டாலும், தாழ்வழுத்தம் மற்றும் எல்.டி.சி.டி. பயன்படுத்தும் நுகர்வோருக்கு, பீக் ஹவர் கட்டணத்தை அமல்படுத்தக்கூடாது.
சின்னவேடம்பட்டி பகுதியில், 1,000க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் செயல்படுகின்றன. அனைத்து தொழிற்சாலைகளும் பயன்பெறும் வகையில், மாவட்ட தொழில் மையம் வாயிலாக, தொழில்நுட்ப உதவி மையம் அமைத்துத் தர வேண்டும்.
அமெரிக்க வரிவிதிப்பால், இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
குறு, சிறு நடுத்தர தொழில் ஏற்றுமதியாளர்கள் பயன்பெறும் வகையில், உருக்கு பொருட்கள் மீதான இறக்குமதி வரியைக் குறைக்க வேண்டும். எம்.எஸ்.எம்.இ. துறைக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்க வேண்டும்.
இவ்வாறு, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் பங்கேற்றனர்.