/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'சிபாகா' நிர்வாக குழு பொறுப்பேற்பு
/
'சிபாகா' நிர்வாக குழு பொறுப்பேற்பு
ADDED : ஏப் 23, 2025 06:36 AM

கோவை : கோயம்புத்துார் பில்டர்ஸ் அண்டு கான்ட்ராக்டர்கள் சங்கத்தின் (சிபாகா) நிர்வாக குழு பதவி ஏற்பு விழா, லீ மெரிடியன் ஹோட்டலில் நடந்தது. புதிய தலைவராக ரம்யா செந்தில், தேர்வு தலைவராக ரவிச்சந்திரன், கவுரவ செயலாளராக சம்சுதீன், கவுரவ பொருளாளராக உதயானந்த், கவுரவ இணை செயலாளராக கிருஷ்ணகுமார் உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டனர்.
முன்னாள் தலைவர் ராமநாதன் வரவேற்றார். கவுரவ செயலாளர் ரவிச்சந்திரன் ஆண்டறிக்கை வாசித்தார்.
கே.பி.ஆர்., மில்ஸ் தலைவர் ராமசாமி பேசுகையில், ''சிவில், மெக்கானிக் போன்ற இன்ஜி., படிப்புகளுக்கு சேர்க்கை குறைந்து வருவது வருத்தம் அளிக்கிறது. இவர்களுக்கு கட்டுமான தொழிலில் இருப்போர் அதிக சம்பளம் அளிக்க வேண்டும்.
கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்தவர்கள், ஏசி அறையில் வேலை பார்த்துக் கொண்டு, குறைந்தபட்சம் 50 ஆயிரம் ரூபாய் வாங்குகின்றனர். வெயிலிலும் மழையிலும் பணியாற்றும் சிவில் இன்ஜினியர்களுக்கு அதில் பாதியும் கூட இருப்பதில்லை. எல்லோரும் மதிக்கும் வகையில், கவுரவமாக நடத்தப்படும் வகையில் சிவில், மெக்கானிக் இன்ஜினியர்களுக்கு உயரிய சம்பளம் வழங்க வேண்டும். அப்போது, இத்துறையை மாணவர்கள் விரும்பி படிப்பர். கட்டுமானத்தின் தரமும் உயரும்,” என்றார்.
கவுரவ விருந்தினராக எல்.எம்.டபிள்யு., திட்ட அலுவலர் சவுந்தரராஜன் பங்கேற்றார். அம்மருண் பவுண்டரிஸ் பங்குதாரர் விஸ்வநாதன், பேப் பிட் அப்பேரல்ஸ் நிர்வாக இயக்குனர் செந்தில்குமார் வாழ்த்தினர். கவுரவ செயலாளர் சம்சுதீன் நன்றி கூறினார்.