ADDED : பிப் 26, 2024 11:13 PM
அ நிறம் | அளவு
மேட்டுப்பாளையம்;மேட்டுப்பாளையம் அருகே வேடர் காலனி இலங்கை அகதிகள் முகாமில் வசித்து வருபவர் யுவராஜ், 41. கூலி தொழிலாளி.
இவரது மனைவி சித்ரா. இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். மனைவியுடன், ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, யுவராஜ் ஒரு வருட காலமாக தனியாக வசித்து வருகிறார். சித்ராவின் தம்பி விஜயன், 35. இந்நிலையில், விஜயன், யுவராஜ் இடையே தகராறு ஏற்பட்டது.
இதில் இருவரும் அரிவாளால் மாறி, மாறி வெட்டி கொண்டனர். இதில் இருவருக்கும் தோள்பட்டை, முதுகு உள்ளிட்ட பாகங்களில், காயம் ஏற்பட்டது. அக்கம் பக்கத்தினர் மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேட்டுப்பாளையம் போலீசார், இருவரையும் கைது செய்தனர்.---
