/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சிட்கோ ரோடு... வெட்கக்கேடு; சரி செய்ய இ.கம்யூ., கோரிக்கை
/
சிட்கோ ரோடு... வெட்கக்கேடு; சரி செய்ய இ.கம்யூ., கோரிக்கை
சிட்கோ ரோடு... வெட்கக்கேடு; சரி செய்ய இ.கம்யூ., கோரிக்கை
சிட்கோ ரோடு... வெட்கக்கேடு; சரி செய்ய இ.கம்யூ., கோரிக்கை
ADDED : டிச 01, 2024 11:38 PM
கோவை; கோவை 'சிட்கோ' பகுதியில் உள்ள சாலைகளை மேம்படுத்த வேண்டும் என, இ.கம்யூ., கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கோவையில், இ.கம்யூ., சிட்கோ கிளை கூட்டம், கட்சி நிர்வாகி அறிவொளி தலைமையில் நடந்தது. சிட்கோ உருவாக்கப்பட்ட காலத்தில் போடப்பட்ட ரோடு, இதுவரை மேம்படுத்தப்படவில்லை. 30 ஆண்டுகளுக்கு மேலாக ரோடு குண்டும் குழியுமாக உள்ளது.
இதற்குள் குடியிருப்புகளும், தொழிற்சாலைகளும் உள்ளன. சாலைகள் பழுதடைந்து புழுதிக் காடாக மாறி உள்ளதால், இங்கு சுகாதாரக் கேடு ஏற்பட்டுள்ளது.
தெரு விளக்குகள் எரியவில்லை. துாய்மை பணியாளர்கள் குப்பை எடுக்க வருவதில்லை. எனவே, இந்த சாலைகள் மற்றும் இணைப்பு சாலைகளை, உடனடியாக பழுது நீக்கி செப்பனிட்டு புதிய தார் சாலைகள் அமைக்க வேண்டும். இங்குள்ள சுகாதார பணிகளை சரி செய்ய வேண்டும் என்பது உட்பட ஐந்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் மத்திய மண்டல செயலாளர் ரவீந்திரன், மண்டலக்குழு உறுப்பினர் சுப்பிரமணியன், முருகேசன் ஆகியோர் பங்ககேற்றனர்.