ADDED : ஆக 14, 2025 08:35 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெகமம்; நெகமம், சமரச சுத்த சன்மார்க்க சத்திய தரும சாலையில், சித்த மருத்துவ ஆலோசனை முகாம் நேற்று நடந்தது.
நெகமம், நாகர் மைதானம், சமரச சுத்த சன்மார்க்க சத்திய தரும சாலையில், மகாலிங்கம் மாரியம்மாள் மணிவிழா அறக்கட்டளை மற்றும் கஸ்தூரிபா காந்தி நினைவு சித்த மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம் இணைந்து நடத்தும் சித்த மருத்துவ ஆலோசனை முகாம் நேற்று நடந்தது.
இதில், 300க்கும் மேற்பட்ட நபர்கள் பங்கேற்றனர். இதில், மூலிகை கலிக்கம், நசியம் மூலிகை தைலம், குதம்பைத் தைலம் உள்ளிட்ட மருந்துகள் வழங்கப்பட்டது. இதில் கலந்து கொண்டவர்களுக்கு மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டது.