ADDED : ஜன 22, 2026 05:06 AM
அ நிறம் | அளவு
கோவை: வேளாண் பல்கலையின், உயிரி தொழில்நுட்ப மகத்துவ மையம் (காக்ஸ்பிட்) மற்றும் சீனு ஹெர்பல் நிறுவனம் இடையே, புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
இதன்படி, சித்தா மற்றும் ஆயுர்வேத அறிவை நவீன அறிவியல் ஆய்வுகளுடன் இணைத்து, இரும்புச்சத்து, ஹீமோகுளோபினை உயர்த்துதல், நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும் தயாரிப்புகளை உருவாக்க ஆய்வுகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
நிகழ்ச்சியில் காக்ஸ்பிட் இயக்குனர் செந்தில், பல்கலை துணைவேந்தர் (பொ) சுப்ரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
