sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 20, 2026 ,மாசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 காட்சிக்கு 'சிக்னல்'; தொடரும் சிக்கல் வாகன ஓட்டிகளுக்கு 'திக்... திக்...'

/

 காட்சிக்கு 'சிக்னல்'; தொடரும் சிக்கல் வாகன ஓட்டிகளுக்கு 'திக்... திக்...'

 காட்சிக்கு 'சிக்னல்'; தொடரும் சிக்கல் வாகன ஓட்டிகளுக்கு 'திக்... திக்...'

 காட்சிக்கு 'சிக்னல்'; தொடரும் சிக்கல் வாகன ஓட்டிகளுக்கு 'திக்... திக்...'


ADDED : பிப் 19, 2026 05:58 AM

Google News

ADDED : பிப் 19, 2026 05:58 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சூலுார்: 'மயிலம்பட்டி பிரிவில் அமைக்கப்பட்டுள்ள சிக்னல், எப்போது செயல்பாட்டுக்கு வரும்' என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

கோவை --- அவிநாசி சாலையில், மயிலம்பட்டி பிரிவு உள்ளது. சரவணம்பட்டி, சத்தி சாலையில் இருந்து, மயிலம்பட்டி, கரையாம்பாளையம் வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் அவிநாசி சாலை வந்து, கருமத்தம்பட்டி, அவிநாசி உட்பட ஊர்களுக்கு செல்கின்றன. இதேபோல், அவிநாசி சாலையில் இருந்து சத்தி சாலைக்கு மயிலம்பட்டி பிரிவு வழியாக தினமும், 100க்கணக்கான வாகனங்கள் பயணிக்கின்றன.

மயிலம்பட்டி பிரிவில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். அந்த இடத்தில் போக்குவரத்தை சீர்படுத்த சிக்னல் அமைக்கப்பட்டது. ஆனால், இதுவரை செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படாததால், அவதி தொடர்கிறது.

வாகன ஓட்டிகள் கூறியதாவது:

மயிலம்பட்டி பிரிவில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதும், சாலையை கடக்கும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குவதும் தொடர்கதையாக உள்ளது. பிரச்னைக்கு தீர்வு காண சிக்னல் அமைக்கப்பட்டும் இதுவரை செயல்பாட்டுக்கு வரவில்லை. அவிநாசி சாலையின் இருபுறமும் வாகனங்கள் இடைவிடாது வேகமாக வருவதால், மயிலம்பட்டி சாலையில் இருந்து அவிநாசி சாலையை கடக்க முடிவதில்லை. உடனடியாக போக்குவரத்து சிக்னலை செயல்பாட்டுக்கு கொண்டு வர, போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு, அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us