தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ ஜவுளித்துறை அறிவிப்புகள் வரவேற்கக் கூடிய அம்சம்

 ஜவுளித்துறை அறிவிப்புகள் வரவேற்கக் கூடிய அம்சம்

 ஜவுளித்துறை அறிவிப்புகள் வரவேற்கக் கூடிய அம்சம்


ADDED : பிப் 19, 2026 05:59 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 19, 2026 05:59 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சோமனுார்: ''தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டில், ஜவுளித்துறைக்கான அறிவிப்புகள் வரவேற்கக் கூடியதாக உள்ளன,'' என, கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் சங்க தலைவர் பூபதி கூறினார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:

பட்ஜெட்டில் புது அறிவிப்பாக, விளையாட்டு வீரர்களின் ஆடைகளின் தரமான உற்பத்தியை உறுதி செய்யவும், அவற்றின் தரத்தை பரிசோதிக்கவும், கோவை சிட்ராவில் உள்ள தென்னிந்திய ஜவுளி ஆராய்ச்சி கழகத்தில், ரூ.6 கோடி மதிப்பீட்டில், நவீன தரப்பரிசோதனை மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கும் அறிவிப்பு, வேட்டி, சேலை வழங்கும் திட்டத்துக்கு, ரூ.612 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. கைத்தறி, கைத்திறன், துணி நுால் மற்றும் கதர் துறைக்கு, மொத்தம், 1,943 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

ஆனால், விசைத்தறியாளர்களின் கோரிக்கையான சோலார் பேனல் அமைக்க மானியம், 'நெட்' மீட்டருக்கு அனுமதி வேண்டும் என்பன உட்பட கோரிக்கை தொடர்பான அறிவிப்புகள் இல்லை. ஏற்கனவே வழங்கப்படும் சலுகைகள், மானியங்கள் எந்த மாற்றமில்லாமல் தொடர்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கைத்தறி நெசவாளர் முதியோர் ஓய்வூதியத்தையாவது உயர்த்தி அறிவித்திருக்கலாம். இவ்வாறு, அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us