/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கையெழுத்து இயக்கம், 'செல்பி பாயின்ட்' துவக்கம் தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை
/
கையெழுத்து இயக்கம், 'செல்பி பாயின்ட்' துவக்கம் தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை
கையெழுத்து இயக்கம், 'செல்பி பாயின்ட்' துவக்கம் தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை
கையெழுத்து இயக்கம், 'செல்பி பாயின்ட்' துவக்கம் தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை
ADDED : மார் 17, 2024 11:53 PM

- நிருபர் குழு -
பொள்ளாச்சி லோக்சபா தேர்தலையொட்டி ஓட்டு அளிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கையெழுத்து இயக்கம் நேற்று நடந்தது.
தற்போது நாடு முழுவதும் லோக்சபா தேர்தல் தேதியை தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. இதையடுத்து, தேர்தல் நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன.
அதன்படி, பொள்ளாச்சி லோக்சபா தேர்தல் வரும் ஏப்., 19ம் தேதி நடக்கிறது. இதையடுத்து வரும், 20ம் தேதி முதல் வேட்பு மனுத்தாக்கல் பணிகள் நடக்கின்றன.
லோக்சபா தேர்தலில், 100 சதவீதம் ஓட்டுப்பதிவை உறுதி செய்திடும் வகையில் பொதுமக்களிடம் தேர்தல் பிரிவு அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக பொள்ளாச்சி சப் - கலெக்டர் அலுவலகம் முன் பிளக்ஸ் வைத்து கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது.
அதில், வாக்காளர்கள் உறுதிமொழியை படித்து, கையெழுத்திடும் வகையில் பிளக்ஸ் வைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியை நேற்று உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் கேத்திரின் சரண்யா துவக்கி வைத்தார். வருவாய்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
செல்பி பாயின்ட்
பொள்ளாச்சி சப் - கலெக்டர் அலுவலகத்தில், ஓட்டு அளிப்பதன் அவசியம் குறித்து விளக்கும் வகையில், விழிப்புணர்வு செல்பி பாயின்ட் வைக்கப்பட்டுள்ளது.
அதில், தேர்தல் பருவம், தேசத்தின் பெருமிதம், நமது இலக்கு, 100 சதவீதம் ஓட்டுப்பதிவு மற்றும் என்ஓட்டு, என் உரிமை என செல்பி பாயின்ட் வைக்கப்பட்டுள்ளது.
அதில், பொதுமக்கள் நின்று போட்டோ எடுத்துக்கொள்ளும் வகையிலும் விழிப்புணர்வு ஏற்படுத்திக்கொள்ளவும் இந்த செல்பி பாயின்ட் வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதில் பலரும் ஆர்வத்துடன் 'செல்பி, எடுத்துக்கொண்டனர்.
உடுமலை
உடுமலை தாலுகா அலுவலகத்தில், 'செல்பி பாயின்ட்' வைத்து தேர்தல் பிரிவு அதிகாரிகள் ஓட்டுப்பதிவு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
பார்லிமென்ட் தேர்தலில், நுாறு சதவீத ஓட்டுப்பதிவு என்ற இலக்கை நோக்கி, தேர்தல் ஆணையம், 'தேர்தல் கொண்டாட்டம்; நாட்டின் பெருமை', என்ற தலைப்பில், விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.
அவ்வகையில், உடுமலை தாலுகா அலுவலகத்தில், தேர்தல் பிரிவு அதிகாரிகள் சார்பில், 'செல்பி பாயின்ட்' அமைத்துள்ளனர்.
தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறுகையில், 'புதிய வாக்காளர்கள் தவறாமல், ஓட்டுப்பதிவு செய்வதற்காக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. மக்கள் கூடும் இடங்களில், 'செல்பி பாயின்ட்' அமைத்து, ஓட்டுப்பதிவு செய்வது ஜனநாயக கடமை என்பதை அறிவுறுத்தி வருகிறோம்,' என்றனர்.

