/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரயில்வே வளர்ச்சி திட்டங்களை அறிவிக்க பொதுமக்களிடம் கையெழுத்து இயக்கம்
/
ரயில்வே வளர்ச்சி திட்டங்களை அறிவிக்க பொதுமக்களிடம் கையெழுத்து இயக்கம்
ரயில்வே வளர்ச்சி திட்டங்களை அறிவிக்க பொதுமக்களிடம் கையெழுத்து இயக்கம்
ரயில்வே வளர்ச்சி திட்டங்களை அறிவிக்க பொதுமக்களிடம் கையெழுத்து இயக்கம்
ADDED : மார் 11, 2024 01:49 AM
போத்தனுார்:மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில், கோவைக்கான ரயில்வே வளர்ச்சி திட்டங்களை அறிவிக்க கோரி மனு அனுப்ப மக்களிடம் கையெழுத்து பெறப்பட்டது.
போத்தனுார் ரயில்வே ஸ்டேஷன் அருகே நேற்று நடந்த நிகழ்ச்சியில் பொதுமக்களிடம் கையெழுத்து பெறப்பட்டது. கோரிக்கை குறித்த நோட்டீஸ் வினியோகம் செய்யப்பட்டது. இதில், போத்தனுார் ரயில் பயனாளர்கள் சங்க பொது செயலாளர் சுப்ரமணியன் உள்பட பலர் பங்கேற்றனர்.
மறுமலர்ச்சி மக்கள் இயக்க தலைவர் ஈஸ்வரன் கூறியதாவது:
போத்தனுார் ரயில்வே ஸ்டேஷனை கோவையின் இரண்டாவது முனையமாக அறிவிக்கவேண்டும். கோவை ரயில்வே ஸ்டேஷனிலிருந்து இயக்கப்படும் கோவை-- சென்னை எக்ஸ்பிரஸ், கோவை - நாகர்கோவில் எக்ஸ்பிரஸ், கோவை - -நாகர்கோவில் பாசஞ்சர், கோவை-- சென்னை இன்டர்சிட்டி ஆகிய ரயில்களை போத்தனுாரிலிருந்து, கோவை வழியே இயக்க வேண்டும்.
கோவை -- மங்களூர் இன்டர்சிட்டி, எர்ணாகுளம் -- பெங்களூரு இன்டர்சிட்டி, எர்ணாகுளம்-- காரைக்கால் எக்ஸ்பிரஸ், சென்னை- - திருவனந்தபுரம் சூப்பர் பாஸ்ட், மும்பை -- கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், ஐலேண்ட் எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்கள் போத்தனுாரில் நின்று, செல்லவேண்டும். நிறுத்தப்பட்ட கோவை-- ராமேஸ்வரம், கோவை-- தூத்துக்குடி, கோவை -- போடிநாயக்கனூர், கோவை - - செங்கோட்டை ஆகிய ரயில்களை மீண்டும், போத்தனுாரில் நின்று செல்லும் வகையில் இயக்க வேண்டும்.
கோவை-- மேட்டுப்பாளையம் மெமோ ரயிலை போத்தனுார் வரை நீட்டிக்கவேண்டும். மேலும், இரண்டாம் கட்டமாக இதை பொள்ளாச்சி வரை நீட்டிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும், 'ஈச்சனாரி மேம்பாலம் அருகே புதிய ரயில்வே ஸ்டேஷன் அமைக்க வேண்டும். இருகூர்-- போத்தனுார் இடையே இரட்டை ரயில் பாதை அமைக்கும் பணியை உடனே துவக்க வேண்டும்.
கோவை-- கரூர் புதிய வழித்தடம், போத்தனுார் வழியே பொள்ளாச்சியிலிருந்து சென்னைக்கு புதிய ரயில் இயக்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ரயில்வே அமைச்சர், தென்னக ரயில்வே பொது மேலாளர் ஆகியோருக்கு மனு அனுப்பப்படுகிறது. இதை வலியுறுத்தி மக்களிடம் கையெழுத்து பெறப்பட்டது.
இவ்வாறு, அவர் கூறினார்.
இதற்கு குறிச்சி குளம் பாதுகாப்பு இயக்கம். சிறுவாணி சாரல் நண்பர்கள், எம்சியா, திருக்குறள் பேரவை உள்ளிட்ட அமைப்புகள் தங்கள் ஆதரவை தெரிவித்திருந்தன.

