/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கவுன்சிலர் கண்டுகொள்ளாத எஸ்.ஐ.ஹெச்.எஸ்., காலனி! சாலை முழுவதும் சேறு, சகதி
/
கவுன்சிலர் கண்டுகொள்ளாத எஸ்.ஐ.ஹெச்.எஸ்., காலனி! சாலை முழுவதும் சேறு, சகதி
கவுன்சிலர் கண்டுகொள்ளாத எஸ்.ஐ.ஹெச்.எஸ்., காலனி! சாலை முழுவதும் சேறு, சகதி
கவுன்சிலர் கண்டுகொள்ளாத எஸ்.ஐ.ஹெச்.எஸ்., காலனி! சாலை முழுவதும் சேறு, சகதி
ADDED : அக் 29, 2024 12:04 AM

மோசமான சாலை
எஸ்.ஐ.ஹெச்.எஸ்., காலனி சக்தி நகர் கிழக்கு பகுதியில், 350 குடும்பத்திற்கு மேல் வசிக்கின்றோம். சாலை மிகவும் மோசமான சூழலில் உள்ளது. மழை நேரங்களில் சேறும், சகதியுமாக இருப்பதால், பள்ளி குழந்தைகளை அழைத்துக்கொண்டு நடந்து செல்லவே முடிவதில்லை. உடனடியாக சரிசெய்து தரவேண்டும். கவுன்சிலரிடம் தெரிவித்தும் பலனில்லை.
- ஷோபனா, சக்தி நகர்.
நடைபாதையில் குப்பை
மாநகராட்சி வார்டு, 45 கே.கே.புதுார் அம்மாசை கோனார் வீதியில், குப்பை நடைபாதையிலேயே கொட்டப்படுகிறது. இதனை உடனடியாக அகற்றி, மக்கள் குப்பை கொட்டாத வகையில், நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- ராதிகா, கே.கே.புதுார்.
நாய்கள் தொல்லை
செட்டிவீதி, அசோக்நகர் பகுதி, சாவித்ரிநகர் 40அடி ரோட்டில் சுற்றித்திரியும் தெரு நாய்களால், குழந்தைகள் மற்றும் மக்கள் அவதிப்படும் சூழல் உள்ளது.
- ஆனந்த் குமார், சாவித்ரி நகர்.
சாலை வசதி தேவை
பேரூர் செட்டிபாளையம் ஊராட்சியிலுள்ள, கிருஷ்ணா நகர் பகுதியில், சரியான சாலை வசதி செய்யப்படவில்லை. மழை நேரங்களில் கடுமையான சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. தெருநாய்களின் தொல்லையும் அதிகம் உள்ளது.
- கஜலட்சுமி, பேரூர் செட்டிபாளையம்.
சாலை துண்டிப்பு
பீளமேடு துக்கினார் வீதியின் ஒருபுற சாலை, குப்பை மற்றும் குழிகளால் பயன்படுத்த முடியாத சூழலில் உள்ளது. இதனால், சமூக விரோதிகள் மது குடிக்கும் இடமாக மாறிவருகிறது. தவிர, பீளமேடு கோபால்நாயுடு பள்ளி அருகிலும், சுற்றுவட்டார பகுதிகளிலும் மின் ஒயர்களில் கொடிகள் பரவி, அறுந்து விழும் நிலையில் உள்ளது.
- கனகராஜ், பீளமேடு.
போக்குவரத்து நெரிசல்
ஆர்.எஸ்.புரம், திருவேங்கடசாமி சாலை மற்றும் தடாகம் சாலை சந்திப்பில், வாகன நெரிசல் தொடர்ந்து ஏற்படுகிறது. இங்கு, போக்குவரத்தை சரிசெய்ய சிக்னல்கள் இல்லை. காவலர்களும் இல்லாததால், அடிக்கடி வாகன நெரிசல் ஏற்பட்டு நேரமும், எரிபொருளும் வீணாகின்றது.
- கார்த்திக், கோவை
விரட்டும் நாய்கள்
மாநகராட்சி 26வது வார்டு ஆதி திராவிடர் காலனி, ரொட்டி கடை மைதானம், பயனிர் மில் ரோட்டில் இரவு மட்டுமின்றி பகல் நேரத்திலும் நாய்கள் விரட்டி வருகின்றன. பல பள்ளிகளுக்கு செல்ல, இது பிரதான சாலை என்பதால் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- கிருஷ்ணன், ரொட்டி கடை மைதானம்.

