/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பட்டுக்கூடு விலை தொடர்ந்து அதிகரிப்பு
/
பட்டுக்கூடு விலை தொடர்ந்து அதிகரிப்பு
ADDED : ஜன 10, 2026 05:05 AM
கோவை: பாலசுந்தரம் ரோட்டில் பட்டு வளர்ச்சித்துறையின் பட்டுக்கூடு விற்பனை அங்காடி உள்ளது. இங்கு கோவை, திருப்பூர், ஈரோடு, கோபி, உடுமலை, திண்டுக்கல் மற்றும் தேனி உள்ளிட்ட பகுதியில் இருந்து விவசாயிகள் பட்டுக்கூடுகளை கொண்டு வந்து, விற்பனை செய்து வருகின்றனர்.
பனிப்பொழிவு காரணமாக, பட்டுக்கூடு உற்பத்தி பாதித்துள்ளது. இதனால் விலை உயர்ந்துள்ளது. கடந்த வாரம் தரமான பட்டுக்கூடு ஒரு கிலோ, 825 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று நடந்த ஏலத்தில் ஒரு கிலோ பட்டுக்கூடு, 795 ரூபாய்க்கு விற்பனையானது. சராசரியாக ஒரு கிலோ 738 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
பட்டு அங்காடி அதிகாரிகள் கூறுகையில், 'வழக்கமாக வாரத்துக்கு, 7 டன் பட்டுக்கூடுகளுக்கு குறையாமல் விற்பனைக்கு வரும். இந்த வாரம், 5 டன் மட்டுமே வந்துள்ளது. பனிக்காலம் முடியும் வரை இப்படித்தான் இருக்கும். விலை குறைய வாய்ப்பில்லை' என்றனர்.

