ADDED : ஜூலை 10, 2025 08:54 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெ.நா.பாளையம்; துடியலுார் அருகே வடமதுரையில் வெள்ளி வளையல் திருட்டு தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
துடியலுார் அருகே வடமதுரை ராமகிருஷ்ணா நகர் ஆனந்தபுரத்தை சேர்ந்தவர் திலீப் குமார்,32. இவர் கடந்த, 5ம் தேதி வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் வெளியூர் சென்று திரும்பினார்.
வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. வீட்டில் படுக்கை அறையில் வைக்கப்பட்டிருந்த இரண்டு வெள்ளி வளையல்கள் திருட்டு போனது தெரியவந்தது.
இது குறித்து, துடியலுார் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.