/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வெள்ளி பொருட்கள் லேப்டாப் திருட்டு
/
வெள்ளி பொருட்கள் லேப்டாப் திருட்டு
ADDED : ஆக 05, 2025 11:22 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெ.நா.பாளையம்; இடிகரையில் வெள்ளி பொருட்கள் திருட்டு போனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இடிகரையில் வசிப்பவர் ராகவ் கிருஷ்ணன், 32. இவர் நடத்தி வரும் நிறுவன அலுவல் காரணமாக வெளிநாடு சென்று விட்டு வீடு திரும்பிய போது, வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.
வீட்டில் முன்பக்க அறையில் வைக்கப்பட்டு இருந்த லேப்டாப், ப்ரொஜெக்டர், ஆப்பிள் வாட்ச், வெள்ளி கப், பிளேட், ஜிமிக்கி, கம்மல், கொலுசு ஆகியன திருடு போயிருந்தது.
இது குறித்து பெரியநாயக்கன்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.