/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
திருவள்ளுவர் சிலை நிறுவி வெள்ளி விழா
/
திருவள்ளுவர் சிலை நிறுவி வெள்ளி விழா
ADDED : டிச 25, 2024 10:29 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை; மாவட்ட நூலகம் சார்பில் திருவள்ளுவர் திருவுருவச் சிலை நிறுவியவெள்ளி விழாவை முன்னிட்டு, திருவள்ளுவர் புகைப்பட கண்காட்சியை,கலெக்டர் பார்வையிட்டார்.
ஆர்.எஸ்.புரம் கவுலிபிரவுன் சாலையிலுள்ள மாவட்ட மைய நுாலகத்தில் நடந்த,புகைப்படக்கண்காட்சியில், கலெக்டர் கிராந்திகுமார் பேசுகையில், ''2,000 ஆண்டுகளுக்கு முன்னர் கூறப்பட்ட கருத்துக்களாக இருந்தாலும், திருக்குறள் இன்றைய காலக்கட்டத்துக்குபொருத்தமானதாக உள்ளது,'' என்றார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட நூலக அலுவலர் ராஜேந்திரன், திருக்குறள் ஆய்வு விரிவுரையாளர் கணேசன், இரண்டாம் நிலை நூலகர் வித்யாபோஸ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

