ADDED : ஜன 21, 2026 05:05 AM
அன்னூர்: அன்னூர் பெருமாள் கோவிலில், பட்டப் பகலில் திருட்டு நடந்தது குறித்து பா.ஜ., புகார் தெரிவித்துள்ளது.
அன்னூரில் 300 ஆண்டுகள் பழமையான கரிவரதராஜ பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயிலில் நேற்று முன்தினம் காலையில், பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள வெள்ளி சடாரி வைக்கப்பட்டு இருந்தது.
மதியம் கோவிலை பூட்டும்போது சடாரியை காணவில்லை. கோவில் நிர்வாகத்தினர் அன்னூர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் தெரிவித்தனர். இந்நிலையில் பா.ஜ., அறிவு சார் பிரிவு மாநில செயலாளர் ஜெயபால் வெளியிட்டுள்ள அறிக்கையில்,' பழமையான பெருமாள் கோவிலில் பட்டப் பகலில் புகுந்து பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள சடாரியை திருடி உள்ளனர்.
இந்து சமய அறநிலைத்துறை மெத்தனமாக உள்ளது. திருட்டு நடந்து இரண்டு நாட்களாகியும் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை.
தி.மு.க., ஆட்சியில் கோவில்களில் நடக்கும் தொடர் திருட்டு, வன்மையாக கண்டிக்கத்தக்கது' என தெரிவித்துள்ளார்.
