/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மூட்டுத் தேய்மான பாதிப்புக்கு கே.எம்.சி.எச்.,ல் எளிய சிகிச்சை
/
மூட்டுத் தேய்மான பாதிப்புக்கு கே.எம்.சி.எச்.,ல் எளிய சிகிச்சை
மூட்டுத் தேய்மான பாதிப்புக்கு கே.எம்.சி.எச்.,ல் எளிய சிகிச்சை
மூட்டுத் தேய்மான பாதிப்புக்கு கே.எம்.சி.எச்.,ல் எளிய சிகிச்சை
ADDED : பிப் 16, 2024 01:49 AM

'உடல் உழைப்பு, உடற்பயிற்சி இல்லா வாழ்க்கை முறை மற்றும் ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமர்ந்து பணியாற்றுவோருக்கு மூட்டு தேய்மானம் ஏற்பட வாய்ப்புள்ளது,' என்கிறார், கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனை மூட்டு மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் தென்னவன்.
அவர் கூறியதாவது:மூட்டுத்தேய்மானம் என்பது முன்பு வயதானவர்களுக்கு மட்டுமே வந்தது. தற்போது இளம் வயதினரையும் பாதிக்கிறது. இதற்கு உடல் உழைப்பு இல்லாதது, ஒரே இடத்தில் அமர்ந்து பணியாற்றுவது போன்றவை காரணங்களாக உள்ளன.
மூட்டு தேய்மானம் என்பது இன்று பொதுவாக பலரையும் பாதிப்பதாக உள்ளது. குறிப்பாக, 60 வயதுக்கு மேற்பட்ட முதியோர்களுக்கு இந்த பாதிப்பு அதிகம் இருக்கும். நடக்க, அன்றாட பணிகளை மேற்கொள்வதில் சிரமம், கால் வலி, மூட்டு இறுக்கமாகுதல், காலை இயல்பாக நீட்டி மடக்க முடியாதது, கால் வீக்கம், கால் வளைந்து இருப்பது பொதுவான அறிகுறிகளாகும்.
பலருக்கு மரபணு ரீதியாக மூட்டு தேய்மான பாதிப்பு ஏற்படுகிறது.
இதை தவிர விபத்தில் அடிபடுதல், காயங்கள் ஏற்பட்டு முறையான சிகிச்சை எடுத்துக்கொள்ளாமல் இருந்தாலும், சீழ் பிடித்தாலும் மூட்டு தேய்மானம் ஏற்படலாம்.
உடல் பருமனாக இருப்பவர்கள், எந்த வேலையும் செய்யாமல் அமர்ந்தே இருப்பவர்கள், அதிகமான உடலுழைப்பை செலுத்தி வேலைகள் செய்பவர்களுக்கு இந்த பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. மருத்துவரை அணுகி சிகிச்சை மேற்கொண்டால், தேய்மானத்தின் பாதிப்புக்கு நல்ல பலனை எதிர்பார்க்கலாம்.
பிசியோதெரபி பயிற்சி, பணிகளை மாற்றி செய்வது, உடற்பயிற்சி செய்வது போன்ற எளிமையான வழிமுறைகள் வாயிலாக பாதிப்பு தீவிரமடையாமல் தடுக்கலாம்.
வெரிகோஸ் வெயின் பாதிப்பு உள்ளவர்கள் நடக்க முடியாமல் சிரமப்படுவர். இவர்களுக்கு மருந்துகள் வாயிலாகவும், முழங்காலுக்குள் சின்னச்சின்ன ஊசிகளை செலுத்தியும், மேலும் தேய்மானம் அதிகமாகாமல் தடுக்கலாம்.
பாதிப்பு முற்றிய நிலையில் இருப்போருக்கு, அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படும். முழு மூட்டு மாற்று சிகிச்சை மற்றும் பகுதி மூட்டு மாற்று சிகிச்சை என இரு வகைகளில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படும்.
கே.எம்.சி.எச்.,ல் பகுதி மூட்டு மாற்று சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. பகுதி மூட்டு மாற்று அறுவை சிகிச்சையில் சின்ன காயம் மட்டுமே இருக்கும், விரைவில் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பலாம். சிகிச்சைக்குப்பின், 20 முதல் 25 ஆண்டுகளுக்கு எந்த பாதிப்பும் இருக்காது.
மேலும் விவரங்களுக்கு, 73393 33485 என்ற மொபைல் போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, அவர் கூறினார்.