/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சிங்கப்பூர் மாணவர்கள் 'சிறுதுளி'க்கு பாராட்டு
/
சிங்கப்பூர் மாணவர்கள் 'சிறுதுளி'க்கு பாராட்டு
ADDED : அக் 16, 2025 05:44 AM

கோவை: சிங்கப்பூர் - இந்தியா கூட்டாண்மை அறக்கட்டளை சார்பில், சிங்கப்பூர் மாணவர் குழுவினர் கோவை வந்துள்ளனர்.
இந்த குழுவினர், சிறுதுளியுடன் இணைந்து நொய்யல் ஆற்றுப்படுகையில் உள்ள நீர் நிலைகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு முயற்சிகளை, ஆய்வு செய்தனர். சிறுதுளி நொய்யல் மையத்தில், மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. இதில் சிறுதுளியின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு முயற்சிகள் குறித்து, விரிவாக விளக்கம் அளிக்கப்பட்டது.
சிறுதுளியின் செயல்பாடு மற்றும் தன்னார்வத் தொண்டு முயற்சியை, சிங்கப்பூர் மாணவர் குழுவினர் வியந்து பாராட்டியதோடு, சிங்கப்பூரில் இது போன்ற நேரடி சுற்றுச்சூழல் செயல்பாடுகள் நடப்பது அரிதானது என்ற தங்கள் கருத்தை பகிர்ந்து கொண்டனர்.