/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அதிரப்பள்ளி ரோட்டில் காயத்துடன் ஒற்றை யானை
/
அதிரப்பள்ளி ரோட்டில் காயத்துடன் ஒற்றை யானை
ADDED : ஜன 24, 2025 06:45 AM

வால்பாறை; வால்பாறை - அதிரப்பள்ளி ரோட்டில் காயத்துடன் சுற்றித்திரியும் ஒற்றை யானைக்கு, சிகிச்சை அளிக்க முடியாமல் கேரள வனத்துறையினர் திணறுகின்றனர்.
கேரள மாநிலம், திருச்சூர் மாவட்டம், சாலக்குடி - வால்பாறை ரோட்டில் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. சுற்றுலா பயணியர் அதிக அளவில் இங்கு வருகின்றனர்.
இந்நிலையில், வால்பாறை - அதிரப்பள்ளி ரோட்டில், ஒற்றை யானை ஒன்று நெற்றியில் காயத்துடன் நடமாடுவதாக, கேரள வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
இதனையடுத்து, வெற்றிலைப்பாறை பகுதியில் இருந்த யானைக்கு சிகிச்சை அளிக்க, சாலக்குடி டி.எப்.ஓ., லட்சுமி தலைமையில், கால்நடை மருத்துவர் அருண்ஜக்காரியா மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்றனர்.
வனத்துறையினரை கண்ட யானை, அங்கிருந்து நகர்ந்து மீண்டும் வனப்பகுதிக்குள் சென்ற மறைந்து கொண்டது. இதனால் யானைக்கு சிகிச்சை அளிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
வனத்துறை அதிகாாரிகள் கூறுகையில், 'வனத்தை விட்டு வெளியே வந்த ஒற்றை யானையின் நெற்றியில் காயம் உள்ளது.
இதற்காக சிகிச்சை அளிக்க யானையை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளோம்.
'ட்ரோன்' கேமரா வாயிலாக யானையின் நடமாட்டம் குறித்து கண்காணிக்கப்படுகிறது. வனப்பகுதியை விட்டு யானை வெளியே வந்தாலோ, அல்லது, வனத்தினுள் ஓரிடத்தில் நின்றாலோ உடனடியாக சிகிச்சை அளிக்கப்படும்,' என்றனர்.

