/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஒற்றை யானை மீண்டும் நடமாட்டம்; விவசாயிகள் பீதி விவசாயிகள் பீதி
/
ஒற்றை யானை மீண்டும் நடமாட்டம்; விவசாயிகள் பீதி விவசாயிகள் பீதி
ஒற்றை யானை மீண்டும் நடமாட்டம்; விவசாயிகள் பீதி விவசாயிகள் பீதி
ஒற்றை யானை மீண்டும் நடமாட்டம்; விவசாயிகள் பீதி விவசாயிகள் பீதி
ADDED : மார் 20, 2025 11:46 PM

பெ.நா.பாளையம்,: சின்னதடாகம் வட்டாரத்தில் ஒற்றை யானையின் நடமாட்டம் மீண்டும் அதிகரித்துள்ளதால், விவசாயிகள் பீதி அடைந்துள்ளனர்.
கோவை வடக்கு புறநகர் பகுதிகளில் வனவிலங்குகளின் நடமாட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக, மலையோர கிராமங்களில், இரவு நேரங்களில் ஒற்றை யானையின் நடமாட்டம் உள்ளது.
நேற்று அதிகாலை துடியலூர் அருகே தாளியூரில் வீட்டுக்குள் உணவுப் பொருட்கள் உள்ளதா என தும்பிக்கையை விட்டு பார்த்துவிட்டு, ஒற்றை யானை அங்கிருந்து சென்றது.
இச்சம்பவம் அப்பகுதியில் வசிக்கும் விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து, விவசாயிகள் கூறுகையில்,' ஒற்றை யானையின் நடமாட்டம் இல்லை என, கோவை மாவட்ட நிர்வாகம் மற்றும் வனத்துறையினர் கூறுகின்றனர். ஆனால், யானைகள் மட்டுமல்லாமல், காட்டு பன்றிகளின் நடமாட்டமும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஒற்றை யானையை இடம் மாற்றம் செய்ய மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை வேண்டுகோள் விடுத்தும், இதுவரை நடவடிக்கை இல்லை.
மேலும், காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த, தமிழக அரசின் உத்தரவை செயல்படுத்த, வனத்துறையினர் தாமதித்து வருகின்றனர். பிரச்னைக்கு கோவை மாவட்ட நிர்வாகம் உடனடியாக தீர்வு காண முன்வர வேண்டும்' என்றனர்.