sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

ஒற்றை யானை உலா வாகன ஓட்டுநர்கள் பீதி

/

ஒற்றை யானை உலா வாகன ஓட்டுநர்கள் பீதி

ஒற்றை யானை உலா வாகன ஓட்டுநர்கள் பீதி

ஒற்றை யானை உலா வாகன ஓட்டுநர்கள் பீதி


ADDED : ஏப் 04, 2025 11:21 PM

Google News

ADDED : ஏப் 04, 2025 11:21 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வால்பாறை, ;வால்பாறையில் கோடை மழை பெய்யும் நிலையில், யானைகள் நடமாட்டமும் அதிக அளவில் காணப்படுகிறது. பல்வேறு எஸ்டேட்களில், யானைகள் தனித்தனி கூட்டமாக முகாமிட்டுள்ளன.

யானைகள் குடிநீர் மற்றும் உணவு தேடி பகல் நேரத்தில் ரோட்டை கடக்கின்றன. குறிப்பாக வால்பாறை - பொள்ளாச்சி ரோட்டில் பல இடங்களில் யானைகள் பகல் நேரத்திலேயே ரோட்டை கடக்கின்றன. இதனால், இந்த ரோட்டில் செல்லும் வாகன ஓட்டுநர்கள் அச்சமடைந்துள்ளனர். குறிப்பாக, இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள், யானையின் பிடியில் இருந்து தப்பிக்க முடியாத நிலை உள்ளது.

வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது: வால்பாறையில், தற்போது கோடை மழை பெய்யும் நிலையில், வனவிலங்குகளின் நடமாட்டமும் அதிகளவில் உள்ளன. குறிப்பாக, யானை, காட்டுமாடு, சிறுத்தைகள் நடமாட்டம் அதிகளவில் காணமுடிகிறது.

எனவே, வால்பாறைக்கு வரும் சுற்றுலா பயணியரும், உள்ளூர் மக்களும் தங்களது வாகனங்களை மிகவும் கவனமாக இயக்க வேண்டும். மாலை, 6:00 மணிக்கு மேல் எஸ்டேட் பகுதியில் இருசக்கர வாகனங்கள் இயக்குவதை தவிர்க்க வேண்டும்.

இவ்வாறு, கூறினர்.






      Dinamalar
      Follow us