/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
எஸ்.ஐ.ஆர். பதிவேற்றத்தில் போலி படிவம்; பா.ஜ. புகார்
/
எஸ்.ஐ.ஆர். பதிவேற்றத்தில் போலி படிவம்; பா.ஜ. புகார்
எஸ்.ஐ.ஆர். பதிவேற்றத்தில் போலி படிவம்; பா.ஜ. புகார்
எஸ்.ஐ.ஆர். பதிவேற்றத்தில் போலி படிவம்; பா.ஜ. புகார்
ADDED : டிச 02, 2025 07:39 AM
போத்தனூர்: மாநிலம் முழுவதும் தற்போது எஸ்.ஐ.ஆர். எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி நடக்கிறது. வாக்காளர்கள் தங்களது பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஒப்படைக்க வேண்டும்.
எந்தவொரு பூத்திலும், நூறு சதவீத விண்ணப்பங்கள் பெறப்படவில்லை. இதற்கு, வாக்காளர் இறப்பு, வீடு மாற்றம் முக்கிய காரணங்கள்.
இந்நிலையில் கிணத்துக்கடவு தொகுதிக்குட்பட்ட பகுதிகளில், சில பூத்களில் நூறு சதவீத விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இதற்கு வாய்ப்பே இல்லை; விவரங்கள் தவறாக உள்ளீடு செய்யப்பட்டுள்ளன என, குற்றஞ்சாட்டுகிறார், பா.ஜ. தெற்கு மாவட்ட முன்னாள் தலைவர் வசந்தராஜன்.
அவர் கூறியதாவது:
இரு நாட்களுக்கு முன் பெறப்பட்ட, எஸ்.ஐ.ஆர். விண்ணப்பங்கள் திரும்ப பெற்று பதிவேற்றப்பட்டன. அதில், பி.எல்.ஓ., மூலமாக பெறப்பட்ட விண்ணப்பங்களை தவிர, 1,50,-250 விண்ணப்பங்கள் தொடர்பு எண், ஆதார் எண், புகைப்படம், வாக்காளரின் சரியான கையெழுத்து இல்லாமல் போலியாக பூர்த்தி செய்து, பதிவு செய்யப்பட்டுள்ளன.
குறிப்பாக, பூத் எண், 120, 121 - 93, 122,- 81, 123 - 83, 124,- 28 மற்றும் 126-ல் 78 சதவீத மக்களின் விண்ணப்பம் பதிவேற்றப்பட்டுள்ளது. 120வது பூத்தில், 20 ஆண்டுகளாக ஒருவர் கூட இறக்கவில்லை, வீடு மாறவில்லை என்பதை ஏற்கவே முடியாது.
இம்முறைகேட்டில் ஈடுபட்ட அனைவர் மீதும், நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்நபர்களால் இத்திட்டத்தின் நோக்கமே சிதைந்து விட்டது.
இவ்வாறு, அவர் கூறினார்.
இம்முறைகேடு குறித்து, ஏ.ஆர்.ஓ., மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் தலைமை தேர்தல் அலுவலருக்கு வசந்தராஜன் புகார் செய்துள்ளார்.

