/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'எஸ்.ஐ.ஆர். பணிக்கு ஊக்கத்தொகை தேவை'
/
'எஸ்.ஐ.ஆர். பணிக்கு ஊக்கத்தொகை தேவை'
ADDED : டிச 11, 2025 05:02 AM
கோவை: எஸ்.ஐ.ஆர்., பணியில் ஈடுபட்டு வரும் ரேஷன்கடை பணியாளர்களுக்கு, 12 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என, கோரிக்கை வைத்துள்ளனர்.
ரேஷன்கடை ஊழியர்கள் கூறியதாவது:
இந்த பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு ஊக்கத் தொகையாக, 12 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும், 12 ஆயிரம் ஊக்கத் தொகையை, ரேஷன் பணியாளர்களுக்கும் வழங்க வேண்டும்.
ரேஷன் பணியாளர்களை 6:00 மணிக்கு பணிக்கு வரவேண்டும் என, உத்தரவிட்டுள்ளனர். ஆனால் அலுவலகம் 10:00 மணிக்குதான் திறக்கப்படுகிறது. பணியாளர்கள் பனியிலும், குளிரிலும் நடுங்கியபடி அலுவலக வாசலில் நிற்கும் நிலை உள்ளது. அதனால் அதிகாலையில் அலுவலகத்தை திறந்து பணி செய்ய அனுமதிக்க வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.

