தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ சிறுவாணி நீர்மட்டம் சரிவு

 சிறுவாணி நீர்மட்டம் சரிவு

 சிறுவாணி நீர்மட்டம் சரிவு


ADDED : மார் 01, 2026 06:36 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 01, 2026 06:36 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோவை: சிறுவாணி அணையின் நீர் மட்டம் 23.22 அடியாக சரிந்துள்ள நிலையில், குடிநீர் தட்டுப்பாடு வருமா என்ற கவலை எழுந்துள்ளது.

கோவை மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணை கேரள வனப்பகுதியில் அமைந்துள்ளது. பராமரிப்பு அம்மாநில நீர் பாசன துறை வசம் உள்ளது. அணையின் நீர் மட்டம் 50 அடி. நீர் கசிவு காரணமாக, 44.61 அடி வரை மட்டுமே நீரை தேக்க கேரள அரசு அனுமதித்துள்ளது.

கடந்தாண்டு புனேயில் இருந்து வந்த தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணைய குழுவும், கேரள அதிகாரிகளும் நீர் கசிவை ஆய்வு செய்தனர். அடுத்து கோவை மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்து, கேரள அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். மாநகராட்சி அதிகாரிகள் கேட்ட, பராமரிப்பு அறிக்கையை கேரள அதிகாரிகள் தரவில்லை.

இதனால் அணைப்பகுதியில் மழை பெய்தாலும் தினமும், 10 லட்சம் லிட்டர் தண்ணீர் கசிந்து வீணாகிறது. பராமரிப்பை காரணம் காட்டி முழு கொள்ளளவு தண்ணீரை தேக்க கேரள அரசு மறுப்பதுடன், கசிவை சரி செய்வதற்கான மதிப்பீட்டை வழங்காமலும் இழுத்தடிக்கிறது. தற்போது வெயிலின் தாக்கம் அதிகரிக்க துவங்கியுள்ளது.

கடந்த 20 நாட்களுக்கும் மேலாக சிறுவாணி அணைப்பகுதியில் மழை இல்லை. நீர்மட்டம் 23.22 அடியாக உள்ளது. குடிநீர் தேவைக்காக 5.3 கோடி லிட்டர் தண்ணீர் எடுக்கப்பட்டது. கோவையின் குடிநீர் தேவை 30 கோடி லிட்டருக்கு அதிகமாக உள்ளதால் ஆழியாறு, பில்லுார் அணைகளில் இருந்து தண்ணீர் எடுத்து சமாளிக்கின்றனர்.

மழை இல்லாததால் அணைகளின் நீர் மட்டம் சரிந்து குடிநீர் வினியோக இடைவெளியும் அதிகரித்து வருகிறது. மார்ச், மே மாதங்களில் கோடையின் தாக்கம் அதிகரிக்கும் நிலையில் தட்டுப்பாடு வந்தால் என்ன செய்வது என அதிகாரிகள் கவலை அடைந்துள்ளனர்.

'மே வரை சமாளிக்க முடியும். நீர் கசிவை சரி செய்ய பராமரிப்பு திட்டத்தை சீக்கிரம் தருமாறு கேரள அதிகாரிகளிடம் கேட்டு வருகிறோம். கோடையில் நீர் மட்டம் குறையும் சமயத்தில் பராமரிப்பு பணிகள் செய்வோம்' என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us