/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
39.20 அடியாக உயர்ந்தது சிறுவாணியின் நீர்மட்டம்
/
39.20 அடியாக உயர்ந்தது சிறுவாணியின் நீர்மட்டம்
ADDED : ஜூன் 07, 2025 01:12 AM
கோவை; கோவையில், தென்மேற்கு பருவ மழை கடந்த மாத இறுதியில் துவங்கியது. மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் கன மழை பெய்ததால், சிறுவாணி அணையின் நீர் மட்டம் வெகுவாக உயர்ந்தது.
நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கன மழை இல்லாவிட்டாலும், துாறல் தொடர்கிறது. சிற்றோடைகளில் நீர் வரத்து இருப்பதால், நீர் மட்டம் கொஞ்சம் உயர்கிறது. நேற்றைய தினம், 39.20 அடியாக அதிகரித்திருந்தது. குடிநீர் தேவைக்காக, 9.85 கோடி லிட்டர் எடுக்கப்பட்டு, மக்களுக்கு வழங்கப்பட்டது.
வரும், 10 முதல் கொங்கு மண்டலத்தின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் மீண்டும் இடியுடன் கூடிய மழை பெய்யத் துவங்குமென வானிலை ஆராய்ச்சியாளர்கள் கணித்துள்ளனர்.
வானிலை ஆராய்ச்சியாளர் சந்தோஷ் கிருஷ்ணன் கூறுகையில், ''வரும், 13 முதல் கேரளா மற்றும் பாலக்காடு கணவாய், மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பருவ மழை காணப்படும். 14 முதல், 18 வரை பருவ மழை உச்சத்தில் இருக்கும். தென்மேற்கு திசையில் எதிர்பார்ப்பதால், நகரப்பகுதியிலும் மழைப்பொழிவுக்கு வாய்ப்பிருக்கிறது. வரும், 7ம் தேதி (இன்று) கொங்கு மண்டலத்தின் வடக்கு பகுதியில் மழைக்கு வாய்ப்புள்ளது,'' என்றார்.