/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சிறுவாணி நீர் மட்டம் 41.26 அடியாக உயர்வு
/
சிறுவாணி நீர் மட்டம் 41.26 அடியாக உயர்வு
ADDED : ஆக 04, 2025 08:15 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை; கோவை சுற்றுவட்டார பகுதிகளில் வெப்பச்சலன மழை பெய்து வருகிறது. மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடரில் மழை காணப்படுவதால், சிறுவாணி நீர் மட்டம் மீண்டும் உயர்ந்து வருகிறது. சில நாட்களுக்கு முன் மழை பெய்த சமயத்தில், மதகு திறக்கப்பட்டு, தண்ணீர் வெளியேற்றப்பட்டது.
அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில், மீண்டும் மழை பெய்ய ஆரம்பித்திருக்கிறது. நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி, 23 மி.மீ., பதிவாகியிருந்தது.
41.26 அடியாக நீர் மட்டம் உயர்ந்துள்ளது. குடிநீர் தேவைக்காக, 10 கோடி லிட்டர் எடுக்கப்பட்டு, கோவை மக்களுக்கு வினியோகிக்கப்பட்டது.