/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
41 அடியாக உயர்ந்தது சிறுவாணி நீர் மட்டம்
/
41 அடியாக உயர்ந்தது சிறுவாணி நீர் மட்டம்
ADDED : அக் 09, 2024 12:22 AM
கோவை : வடகிழக்கு பருவ மழை அக்., இரண்டாவது வாரத்தில் துவங்கும் என வானிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்திருந்த நிலையில், இம்மாத துவக்கத்தில் இருந்தே சிறுவாணி அணை பகுதியில், பரவலாக மழைப்பொழிவு காணப்படுகிறது.
நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி, அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில், 20 மி.மீ., அடிவாரத்தில், 5 மி.மீ., மழை பதிவாகியிருந்தது. குடிநீர் தேவைக்காக, 9.70 கோடி லிட்டர் தண்ணீர் எடுத்து வினியோகிக்கப்பட்டது. 41.10 அடியாக நீர் மட்டம் உயர்ந்திருக்கிறது.
இதேபோல், கோவை மாவட்டத்தின் இதர பகுதிகளிலும், நேற்று முன்தினம் இரவு மழைப்பொழிவு இருந்தது.
அதன் விவரம்:
பீளமேடு விமான நிலையம் - 10.30 மி.மீ., வேளாண் பல்கலை - 13.60, பெரியநாயக்கன்பாளையம் - 16.40, அன்னுார் - 12.20, கோவை தெற்கு - 33.40, சூலுார் - 39, தொண்டாமுத்துார் - 8, மதுக்கரை - 12, சின்னக்கல்லார் - 30, வால்பாறை - 30, சோலையாறு - 43 மி.மீ., மழை பதிவாகியுள்ளது.