/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சிறுவாணியின் நீர் மட்டம் 44 அடியை நெருங்குகிறது
/
சிறுவாணியின் நீர் மட்டம் 44 அடியை நெருங்குகிறது
ADDED : நவ 02, 2024 11:18 PM
கோவை: கோவைக்கு மிக முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில், நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி, 26 மி.மீ., அடிவாரத்தில் 17 மி.மீ., மழை பதிவானது.
9.7 கோடி லிட்டர் குடிநீர் எடுக்கப்பட்டு, கோவை மாநகராட்சி மற்றும் வழியோர பகுதி மக்களுக்கு வினியோகிக்கப்பட்டது.
43.82 அடியாக நீர் மட்டம் உயர்ந்திருக்கிறது. நீர்புகு கிணற்றில் உள்ள நான்கு வால்வுகளும் தண்ணீருக்குள் மூழ்கியுள்ளன.
அதனால், ஓராண்டுக்கு குடிநீர் பிரச்னை வராது என்கிற நம்பிக்கை ஏற்பட்டு இருக்கிறது.
மாவட்டத்தின் இதர பகுதிகளில் பெய்த மழை அளவு: பீளமேடு விமான நிலையம் - 26 மி.மீ., பில்லுார் அணை - 19, அன்னுார் - 10.20, ஆனைமலை - 19, ஆழியார் - 11.20, சின்கோனா - 15, சின்னக்கல்லார் - 47, சோலையார் - 12, போத்தனுார் - 5.40, மேட்டுப்பாளையம் - 4 மி.மீ., மழை பதிவானது.