/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாநில தடகள போட்டியில் பதக்கம் வென்ற சகோதரிகள்
/
மாநில தடகள போட்டியில் பதக்கம் வென்ற சகோதரிகள்
ADDED : அக் 02, 2025 11:44 PM

கோவை;தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில், 39வது மாநில அளவிலான தடகளப் போட்டி, வடலுார் தமிழ்நாடு விளையாட்டுப் பல்கலை மைதானத்தில் நடந்தது. செங்கல்பட்டு மாவட்ட தடகள சங்கம் நடத்திய இப்போட்டியில், பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.
இதில், 18 வயதுக்கு உட்பட்ட இளையோர் பிரிவில் கலந்து கொண்ட, ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லுாரியின் முதலாமாண்டு இளங்கலை ஆங்கில இலக்கியம் படிப்பு மாணவியர் அக்சரா உயரம் தாண்டுதலிலும் (1.53 மீ.,), அப்ஷரா நீளம் தாண்டுதல் போட்டியிலும் (5.60 மீ.,), இரண்டாமிடம் பிடித்து வெள்ளிப்பதக்கம் வென்றனர்.
இரட்டை சகோதரிகளான இவர்கள், மாவட்ட அளவிலான தடகள போட்டியில் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்றதையடுத்து, மாநிலப் போட்டிக்கு தகுதி பெற்றனர். தொடர்ந்து, இம்மாதம் ஒடிசாவில் நடைபெறும் தேசிய அளவிலான தடகள போட்டிக்கு இருவரும் தேர்வு செய் யப்பட்டுள்ளனர். இரட்டை சகோதரிகளை, கல்லுாரி முதல்வர் சிவக்குமார் பாராட்டினார்.