/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
முதல்வர் கோப்பை போட்டிகளுக்காக சென்னை புறப்பட்ட கோவை வீரர்கள்
/
முதல்வர் கோப்பை போட்டிகளுக்காக சென்னை புறப்பட்ட கோவை வீரர்கள்
முதல்வர் கோப்பை போட்டிகளுக்காக சென்னை புறப்பட்ட கோவை வீரர்கள்
முதல்வர் கோப்பை போட்டிகளுக்காக சென்னை புறப்பட்ட கோவை வீரர்கள்
ADDED : அக் 02, 2025 11:44 PM

கோவை:சென்னையில் நடக்கும் முதல்வர் கோப்பைக்கான, மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்பதற்காக, கோவை மாவட்ட விளையாட்டு வீரர்கள் புறப்பட்டுச் சென்றனர்.
தமிழகம் முழுவதும் மாவட்ட அளவிலான முதல்வர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டி, ஆக. 26 முதல் செப். 10 வரை நடந்தது. கோவை மாவட்டத்தில் இந்தாண்டு பள்ளி, கல்லுாரி மாணவர்கள், அரசு ஊழியர்கள், பொதுப்பிரிவினர், மாற்று திறனாளிகள் என 35 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
தடகள போட்டிகள், பளு துாக்குதல், சிலம்பம், கபடி, கால்பந்து, வாலிபால், பேட்மின்டன் போன்ற விளையாட்டு போட்டிகளில், முதல் மூன்று இடங்கள் பிடித்தவர்கள், மாநில அளவிலான போட்டிகளுக்கு தேர்வாகினர்.
மாநில அளவிலான போட்டிகள், சென்னையில் நேற்று துவங்கியது. அதில் பங்கேற்க, கோவை மாவட்டத்தில் இருந்து, 133 விளையாட்டு வீரர்கள், அரசு பஸ்சில் புறப்பட்டுச் சென்றனர். எம்.பி., ராஜ்குமார், கலெக்டர் பவன்குமார், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய மண்டல முதுநிலை மேலாளர் அருணா, மாவட்ட விளையாட்டு அலுவலர் புவனேஸ்வரி ஆகியோர், வழி அனுப்பி வைத்தனர்.