/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஐயப்பன் கோவிலில்வித்யாரம்பம் நிகழ்ச்சி
/
ஐயப்பன் கோவிலில்வித்யாரம்பம் நிகழ்ச்சி
ADDED : அக் 02, 2025 11:45 PM

கோவை:கோவை சித்தாபுதுார் ஐயப்பன் கோவிலில் ஆண்டுதோறும் நவராத்திரி நிகழ்ச்சிகள் நடத்தப்படும். அதன் ஒரு பகுதியாக, நேற்று, வித்யாரம்பம் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. காலையில் இருந்தே, கோவையின் பல்வேறு பகுதிகளில் இருந்து, குழந்தைகளுடன் பெற்றோர் வந்தனர்.
அரிசி, நெற்மணிகளில், குழந்தைகளின் விரல் பிடித்து எழுத வைத்தனர். பங்கேற்றவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. தவிர, அம்மன் சன்னதியில், 500க்கும் மேற்பட்ட குழந்தைகளின் புத்தகங்கள் வைக்கப்பட்டு, விஜயதசமியை முன்னிட்டு, அவற்றை பெற்று சிறிது நேரம் வாசித்துச் சென்றனர்.லட்சுமி நாராயணா கோவில்
கோவை மதுக்கரை லட்சுமி நாராயணா கோவிலில், 20க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு வித்யாரம்பம் மேற்கொள்ளப்பட்டது.
கோவிலில், நவராத்திரியை முன்னிட்டு, கடந்த 22ம் தேதி முதல் நேற்று முன்தினம் வரை மாலை சிறப்பு பூஜை, பெண்கள் சார்பில் பஜன், ஸ்லோகங்கள், லலிதா சகஸ்ரநாமம் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. விஜயதசமி நாளான நேற்று, வித்யாரம்பம் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
காலை 8:20 மணியிலிருந்து 10:00 மணி வரை நடந்த நிகழ்ச்சியில், மதுக்கரை சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து, 20க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு வித்யாரம்பரம் மேற்கொள்ளப்பட்டது. குழந்தைகளின் உறவினர்கள் பலர் பங்கேற்றனர். விழா ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகம் மேற்கொண்டது.