ADDED : ஆக 03, 2025 09:46 PM

கோவை; ஆஸ்திக ஸமாஜம் சார்பில் கடந்த நான்கு நாட்களாக நடந்த ஸ்ரீ மஹாருத்ரம், வள்ளி, சீதா கல்யாண மஹோத்ஸவ விழா வஸந்த கேளிக்கை, பவ்வளிம்பு வைபவங்களுடன் விழா நிறைவு பெற்றது.
ஆஸ்திக ஸமாஜம் சார்பில் 26ம் ஆண்டு நாம ஸங்கீர்த்தன வைபவம் மற்றும் ஸ்ரீ மஹாருத்ரம், வள்ளி, சீதா கல்யாண மஹோத்ஸவ விழா ஜூலை 1 ஸ்ரீ மஹா கணபதி ஹோமத்துடன் துவங்கியது, மஹன்யாச ஜெபம், ருத்ராபிஷேகம், கோபூஜை ஆகியவை நடந்தது.
நிறைவு நாளான நேற்று ஸ்ரீ ஜகத்குருடிரஸ்ட் சார்பில் ராமகிருஷ்ணகனபாடிகள் குழுவினரின் வேதபாராயணமும், நல்லிச்சேரி பிரம்மஸ்ரீ ஜம்புநாத கனபாடிகள் குழுவினரின் உஞ்சவிருத்தி நிகழ்ச்சியும்,
சீர்காழி ஸ்ரீ சட்டநாத பாகவதர் குழுவினரின் ஸ்ரீ சீதா கல்யாண மஹோத்ஸவம் பழமையும் கலாசாரமும் பாரம்பரியமும் மாறாமல் அதே நடைமுறையுடன் அரங்கேறியது.
ஸ்ரீ ஸ்ரீராம்பாகவதர் குழுவினரின் வஸந்தகேளிகை, பவ்வளிம்பு, ஆஞ்சநேய உத்ஸவம் ஆகியவை நடந்தது. மங்கள ஹாரத்தியுடன் விழா இனிதே நிறைவடைந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
இது குறித்து ராமகிருஷ்ண கனபாடிகள் கூறுகையில், '' லோக ஷேமத்திற்கும், மக்கள் நல்வாழ்விற்கும், மாதம் மும்மாரி மழை பொழியவும் நாமசங்கீர்த்தன வைபவத்தை ஆஸ்திகஸமாஜம் 26வது ஆண்டாக நடத்தி வருகிறது. கோவை மாவட்டம் அனைத்து துறையிலும் சிறப்பான வளர்ச்சியை பெற வேண்டும். என்பது எங்களது ஆஸ்திக ஸமாஜத்தின் தாரகமந்திரங்களுள் ஒன்று.
நிகழ்வுக்கு ஒத்துழைத்த கோவை வாழ் மக்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்,'' என்றார்.