/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தொழிலாளி மீது தாக்குதல்; சிவகங்கை வாலிபருக்கு சிறை
/
தொழிலாளி மீது தாக்குதல்; சிவகங்கை வாலிபருக்கு சிறை
தொழிலாளி மீது தாக்குதல்; சிவகங்கை வாலிபருக்கு சிறை
தொழிலாளி மீது தாக்குதல்; சிவகங்கை வாலிபருக்கு சிறை
ADDED : ஜூன் 11, 2025 07:31 PM
கோவை; வெளிமாநில தொழிலாளியை இரும்பு கம்பியால் தாக்கிய வாலிபரை, போலீசார் சிறையில் அடைத்தனர்.
மேற்கு வங்கத்தை சேர்ந்தவர் தீப்தாஸ், 19; தியாகி குமரன் வீதியில் உள்ள ஒரு நகை பட்டறையில் பணியாற்றி வந்தார். கடந்த, 8ம் தேதி தீப்தாஸ் கடையில் இருந்த போது, சிவகங்கையை சேர்ந்த தினேஷ், 27 மற்றும் அவரது நண்பரான விக்னேஷ் ஆகியோர் அங்கு வந்தனர். அப்போது, தீப்தாசின் கை தவறுதலாக தினேஷ் மீது பட்டது.
இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து, விக்னேஷ், தீப்சாஸை பிடித்துக்கொள்ள, அருகில் கிடந்த ஒரு இரும்பு கம்பியால் தினேஷ், தீப்தாசை சரமாரியாக தாக்கினார். தீப்தாசின் சத்தம் கேட்டு வந்த, பட்டறை உரிமையாளர் ஜாகிர் உசைன் மற்றும் அவரது நண்பர், தினேசிடம் இருந்து தீப்தாசை மீட்டு, கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சம்பவம் குறித்து தீப்தாஸ் ஆர்.எஸ்.புரம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, தினேசை கைது செய்து, சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள அவரது நண்பர் விக்னேசை தேடி வருகின்றனர்.