/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சிவன்மலை கோவில் பெட்டியில் ஒரு படி நெல்; மங்களம் பெருகும்
/
சிவன்மலை கோவில் பெட்டியில் ஒரு படி நெல்; மங்களம் பெருகும்
சிவன்மலை கோவில் பெட்டியில் ஒரு படி நெல்; மங்களம் பெருகும்
சிவன்மலை கோவில் பெட்டியில் ஒரு படி நெல்; மங்களம் பெருகும்
ADDED : பிப் 10, 2024 01:17 AM

திருப்பூர்;சிவன்மலை கோவில், ஆண்டவர் உத்தரவு பெட்டியில், நேற்று முதல் ஒரு படிநெல் வைத்து சிறப்பு பூஜை நடக்கிறது.
திருப்பூர் மாவட்டம், சிவன்மலை ஸ்ரீசுப்பிரமணியர் கோவிலில், ஆண்டவர் உத்தரவுப்பெட்டி வழிபாட்டு முறை உள்ளது. முருகப்பெருமான், பக்தர் கனவில் தோன்றி உணர்த்தும் பொருள், கோவிலில் உள்ள உத்தரவு பெட்டியில் வைத்து வழிபாடு நடத்தப்படும்.
கடந்த ஆக., மாதம் முதல், கன்றுடன் கூடிய பசு மாட்டின் சிறிய சிலை வைத்து பூஜை நடந்து வந்தது. இந்நிலையில் நேற்று முதல், பொருள் மாற்றப்பட்டு ஒரு படி நெல் வைத்து சிறப்பு பூஜை நடந்தது.
கூனம்பட்டி திருமடம் நடராஜ சுவாமிகளிடம் கூறுகையில்,''ஒரு படி நெல் வைத்து பூஜிப்பது சுபிட்சத்தை குறிக்கும்; மங்களகரமாகவும், வெற்றிகரமாகவும் இருக்கும். மகாலட்சுமியின் திருவருள் பரிபூரணமாக கிடைக்கும்; நாட்டில், மங்களகரமான நிகழ்ச்சிகள் அதிகம் நடக்கும்; ஐஸ்வர்யம் பெருகும். தொழிலில் வருவாய் பெருகும்; தொழில்துறையில் தடைகள் விலகும்; விவசாயம் செழிப்படையும்; விவசாயிகள் மகிழ்ச்சி அடைவார்கள்,'' என்றார்.