/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மது விருந்தில் கத்திக்குத்து; ஆறு பேர் கைது
/
மது விருந்தில் கத்திக்குத்து; ஆறு பேர் கைது
ADDED : செப் 01, 2025 07:30 PM

போத்தனுார்:
கோவை சுந்தராபுரம் உள்ளிட்ட சுற்றுப் பகுதிகளில், பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த விநாயகர் சிலைகள், 29ல் விசர்ஜனம் செய்யப்பட்டன. இதில், ராஜேந்திரனின் ஹனுமன் சேனா அமைப்பும் அடங்கும்.
நிகழ்ச்சி முடிந்ததற்கு மறுநாள் ரங்கநாதபுரத்தில் உள்ள கணேஷ், 32 என்பவரது வீட்டின் மாடியில் மது விருந்து நடந்தது. மாவட்ட இளைஞரணி தலைவர் விக்னேஸ்வர மூர்த்தி, 35, பழனிமுருகன், 39, அனந்தராமகிருஷ்ணன், 31, வெங்கடேஷ், 27, சுரேஷ், 29, பிரகாஷ், 29, பிரவீண், 21, மணிகண்டன், 31 உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அவர்களுக்கு இடையே ஜாதி குறித்து பேசி, வாக்குவாதம் ஏற்பட்டது. கணேஷ், பிரவீண், மணிகண்டன் ஒரு கோஷ்டியாகவும், மற்றவர்கள் ஒரு கோஷ்டியாகவும் மோதினர்.
கணேஷ் கோஷ்டியை, விக்னேஸ்வரமூர்த்தி கத்தியால் குத்தினார். அதன்பின், அங்கிருந்து அனைவரும் தப்பினர். காயமடைந்த மூவரும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
சுந்தராபுரம் போலீசார் விசாரணை நடத்தினர். எஸ்.ஐ.முத்துக்குமார், எஸ்.எஸ்.ஐ. ஜெயபால், ஏட்டுகள் விஜயகுமார், கிருஷ்ணகுமார் உள்ளிட்டோர் ஈச்சனாரி பாலம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அவ்வழியே காரில் தப்பிய, விக்னேஸ்வர மூர்த்தி உள்ளிட்ட ஆறு பேரை, கைது செய்த போலீசார், கத்தி ஒன்றையும் பறிமுதல் செய்தனர்.