/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் ஆறு கிலோ பறிமுதல்
/
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் ஆறு கிலோ பறிமுதல்
ADDED : ஜூன் 19, 2025 07:38 AM
அன்னுார் : அன்னுார் பேரூராட்சியில் நடந்த சோதனையில், ஆறு கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பிடிபட்டன.
அன்னுார் பேரூராட்சியில், தடை செய்யப்பட்ட, ஒரு முறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் டம்ளர், பாலீத்தின் கவர்கள் மற்றும் எளிதில் மக்காத பிளாஸ்டிக் பொருட்கள் விற்கப்படுவதாக புகார் வந்தது.
இதையடுத்து ஓதிமலை ரோடு மற்றும் சிறுமுகை ரோட்டில் உள்ள கடைகளில் நேற்று அதிரடி சோதனை நடைபெற்றது. பேரூராட்சி துப்புரவு அலுவலர் ராஜ்குமார், மேற்பார்வையாளர் பிரதீப் குமார் மற்றும் ஊழியர்கள் சோதனை நடத்தினர்.
இதில் ஆறு கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 3,800 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
'இரண்டாவது முறை பிடிபட்டால் அபராதம் இரட்டிப்பாகும். மூன்றாம் முறை பிடிபட்டால் சீல் வைக்கும் நடவடிக்கை எடுக்கப்படும்,' என அலுவலர்கள் தெரிவித்தனர்.