/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆறு வழி சாலை! ரூ.1,200 கோடியில் தயாராகிறது நீலாம்பூர் - மதுக்கரை பாதை
/
ஆறு வழி சாலை! ரூ.1,200 கோடியில் தயாராகிறது நீலாம்பூர் - மதுக்கரை பாதை
ஆறு வழி சாலை! ரூ.1,200 கோடியில் தயாராகிறது நீலாம்பூர் - மதுக்கரை பாதை
ஆறு வழி சாலை! ரூ.1,200 கோடியில் தயாராகிறது நீலாம்பூர் - மதுக்கரை பாதை
ADDED : ஆக 02, 2025 11:41 PM

கோவை: சேலத்தில் இருந்து கோவை வழியாக, கேரளா செல்லும் கொச்சின் சாலை, நீலாம்பூர் அருகே கடக்கிறது. சேலத்தில் இருந்து நீலாம்பூர் வரை ஆறு வழியாகவும், வாளையார் முதல் மதுக்கரை வரை நான்கு வழியாகவும் உள்ளது.
இடைப்பட்ட, நீலாம்பூர் முதல் வாளையார் வரையிலான, 28 கி.மீ., இரு வழிச்சாலையாக, 10 மீட்டர் அகலத்துக்கு இருக்கிறது. இவ்வழித்தடத்தை தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் பயன்படுத்துகின்றன.
அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு, உயிர் பலி ஏற்பட்டு வருகின்றன. அதனால், அச்சாலையை நான்கு வழியாகவோ அல்லது ஆறு வழியாகவோ அகலப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
தனியார் நிறுவனத்திடம் இருந்த இச்சாலையை இழப்பீடு வழங்கி, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கையகப்படுத்தியுள்ளது. முதல்கட்டமாக ஐந்து இடங்களில் சுங்கச்சாவடிகள் அகற்றப்பட்டுள்ளன.
அச்சாலையை ஆறு வழியாக அகலப்படுத்த ஆணையம் முடிவெடுத்து, விரிவான திட்ட அறிக்கை தயாரித்து வருகிறது.
ஆணைய அதிகாரிகள் கூறுகையில், 'புறவழிச்சாலை விஸ்தரிக்கப்படும் இடங்களில் எவ்வளவு நிலம் கையகப்படுத்த வேண்டுமென ஆய்வு செய்கிறோம்.
விரிவான திட்ட அறிக்கை இறுதி செய்ய ஆறு மாதங்களாகும். 32 இடங்களில் சுரங்கப்பாதை அமையும்; 2 இடங்களில் ரயில்வே மேம்பாலம் அமைக்கப்படும். உத்தேசமாக ரூ.1,200 கோடி தேவைப்படும்'என்றனர்.