/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
துபாய் டிராவல்ஸ் அதிபர் கொலை வழக்கு ஆறு பேரை காவலில் எடுத்து விசாரணை
/
துபாய் டிராவல்ஸ் அதிபர் கொலை வழக்கு ஆறு பேரை காவலில் எடுத்து விசாரணை
துபாய் டிராவல்ஸ் அதிபர் கொலை வழக்கு ஆறு பேரை காவலில் எடுத்து விசாரணை
துபாய் டிராவல்ஸ் அதிபர் கொலை வழக்கு ஆறு பேரை காவலில் எடுத்து விசாரணை
ADDED : ஜூன் 07, 2025 11:36 PM
கோவை: திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் விளாத்தியூரை சேர்ந்த சிகாமணி, 69; துபாயில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வந்தார். இவருக்கு மனைவி இரண்டு குழந்தைகள் உள்ளனர். சிகாமணிக்கு துபாயில் ஓட்டலில் வேலை செய்த, கோவை காந்தி மாநகரை சேர்ந்த சாரதாவுடன் பழக்கம் ஏற்பட்டு கள்ளக் காதலாக மாறியது.
சாரதாவிடம், சிகாமணி வாங்கியிருந்த, ரூ.6 லட்சம் பணத்தை கேட்டபோது அவர்கள் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் அவர் சாரதாவை தாக்கினார். அதன் பின் சாரதா கோவை திரும்பினார். இதையடுத்து சிகாமணி ஏப்., 21ம் தேதி துபாயில் இருந்து கோவை வந்தார்.
அப்போது, சாரதா மற்றும் ஐந்து பேர் சேர்ந்து, சிகாமணிக்கு உணவில் அளவுக்கு அதிகமாக துாக்க மாத்திரைகள் மற்றும் வலி நிவாரணி மாத்திரைகளை கலந்து கொடுத்து கொலை செய்தனர். உடலை கரூர், பரமத்தி காட்டுப் பகுதியில் வீசினர்.
இதுதொடர்பாக, போலீசார் சாரதா, 30 அவரது தாயார் கோமதி, 53, அக்கா நிலா, 33, உறவினர் சுவாதி, 26, கூலிப்படையை சேர்ந்த புதியவன், 48, தாயாரின் கள்ளக் காதலன் தியாகராஜன், 69 ஆகியோரை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
இதையடுத்து, சிகாமணியை கொலை செய்தது குறித்தும், அவரை எங்கு கொண்டு வீசினார் என்பது குறித்தும் விசாரிக்க ஆறு பேரிடமும், கடந்த 3ம் தேதி முதல் நீதிமன்ற அனுமதி பெற்று, காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.
கரூரில் சிகாமணியின் உடலை வீசிச்சென்ற இடத்திற்கு, நேரில் அழைத்து சென்று விசாரித்தனர்.