/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குட்கா விற்பனை செய்த ஆறு கடைகளுக்கு 'சீல்'
/
குட்கா விற்பனை செய்த ஆறு கடைகளுக்கு 'சீல்'
ADDED : ஏப் 19, 2025 11:41 PM
தொண்டாமுத்தூர்: பேரூர் உட்கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளில், குட்கா விற்பனை செய்த, 6 கடைகளுக்கு, உணவு பாதுகாப்புத்துறையினர் சீல் வைத்தனர்.
பேரூர் உட்கோட்டத்திற்குட்பட்ட தொண்டாமுத்தூர், ஆலாந்துறை, காருண்யா நகர், பேரூர், மதுக்கரை, கிணத்துக்கடவு, கே.ஜி.சாவடி ஆகிய போலீஸ் ஸ்டேஷன் எல்லைகளுக்குட்பட்ட பகுதிகளில், போலீசார் மற்றும் உணவு பாதுகாப்புத்துறையினர் இணைந்து, நேற்று திடீரென, பள்ளி மற்றும் கல்லூரி அருகில் உள்ள கடைகளில் சோதனை நடத்தினர்.
இதில், பல்வேறு கடைகளில் குட்கா விற்பனை செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டு, மொத்தம் , 2 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கடை உரிமையாளர்கள் மீது, 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. வழக்குப்பதிவு செய்யப்பட்ட, 6 கடைகளுக்கும், உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள், 'சீல்' வைத்தனர்.